×

திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

திருப்புவனம், மார்ச் 20:  திருப்புவனத்தில் பிரசித்திபெற்ற புஷ்பவனேஸ்வரர்-சவுந்தரநாயகி அம்பாள் கோயில் உள்ளது. இக்கோயில் சிவகங்கை தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி திருவிழா பத்து நாட்கள் வரை தொடந்து நடந்து வருகிறது. நேற்று பங்குனி திருவிழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுவாமி அம்பாள் தினந்தோறும் பல்வேறு வகையான வாகனங்களில் திருவீதி உலா வைபவம் நடைபெறும். 26ம் தேதி திருக்கல்யாணம் நடக்கவுள்ளது. 27ம் தேதி நடைபெறும் தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுப்பார்கள். இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் செந்தில் குமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags : Panguni Festival ,Thiruppuvanam Pushpavaneswarar Temple ,
× RELATED கொடைக்கானலில் 22 ஆண்டுக்குப் பிறகு...