வட்டார செயற்குழு கூட்டம்

சிவகங்கை, மார்ச் 20:  சிவகங்கையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரச் செயற்குழுக் கூட்டம் நடந்தது. வட்டாரத் தலைவர் கலைச்செல்வி தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் குமரேசன், மாவட்ட துணைத்தலைவர் மாலா, மாவட்ட துணைச் செயலாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர். வட்டார துணைத் தலைவர் இந்திரா காந்தி வரவேற்றார். வட்டாரச் செயலாளர் கணேசன் கூட்டப்பொருள் குறித்து விளக்கிப் பேசினார்.

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தாங்கள் பணியாற்றும் சொந்த தொகுதியிலேயே பணி வழங்க வேண்டும். பெண் ஆசிரியர்களை தொலை தூரத்தில் பணியமர்த்தாமல் இருக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரம்ப, நடுநிலை பள்ளி ஆசிரியர்களின் ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் உண்மைத்தன்மை அறிய விண்ணப்பம் அளித்து பல ஆண்டுகளாகியும் உண்மைத்தன்மை சான்று கிடைக்காததால் ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இப்பணியை விரைந்து முடிக்க நினைவூட்டல் செய்யுமாறு வட்டாரக்கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டார பொருளாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.

Related Stories:

>