×

ஆர்டிஓவிடம் மனு மயிலாடுதுறை வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

மயிலாடுதுறை, மார்ச் 20: மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. இதையொட்டி மன்னம்பந்தலில் உள்ள தனியார் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்படுகிறது. இந்த மையத்தை தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ், தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன்பிநாயர், எஸ்பி நாதா ஆய்வு செய்தனர். அப்போது வாக்கு எண்ணும் மையத்தில் உள்கட்டமைப்பு வசதி, பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார். பின்னர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், நாகை கலெக்டருமான பிரவீன்பிநாயர் கூறுகையில், ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு முடிந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்படும். ஒவ்வொரு வேட்பாளரின் சார்பில் ஒரு முகவர் பாதுகாப்பு அறையை கண்காணிக்க அனுமதிக்கப்படுவர்.

பாதுகாப்பு அறைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும். இன்று வேட்புமனு பரிசீலனை செய்யப்படும். மாவட்டத்தில் 3 பொது பார்வையாளர்கள், ஒரு போலீஸ் பார்வையாளர், செலவின பார்வையாளர் 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் கொரோனா தொற்று ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் பிரசாரங்களுக்கு வரும் அனைவரும் முககவசம் அணிந்து கொரோனா விதிமுறையை பின்பற்ற வேட்பாளரிடம் அறிவுறுத்தியுள்ளோம். கொரோனா தொற்று உடையவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

Tags : RTO Election Observer ,Mayiladuthurai ,Vote Counting Center ,
× RELATED சென்னை ராணி மேரி கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் காவல் ஆணையர் ஆய்வு!!