×

போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை நாகை கிழக்கு சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவ ஆராட்டு விழா கொடியேற்றம்

நாகை, மார்ச் 20: பங்குனி உத்திர பிரமோற்சவ ஆராட்டு விழாவையொட்டி நாகை கிழக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நேற்று கொடியேற்றம் நடந்தது. நாகை கிழக்கு சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவ ஆராட்டு விழா நடைபெறும். இதன்படி இந்தாண்டு விழா வரும் 28ம் தேதி நடக்கிறது. இதையொட்டி நேற்று முன்தினம் (18ம் தேதி) விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. இதைதொடர்ந்து நேற்று (19ம் தேதி) கோயிலில் உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இதில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். வரும் 28ம் தேதி சட்டநாதர் கோயில் தீர்த்த குளத்தில் ஐயப்பனுக்கு ஆராட்டு வைபவம் நடக்கிறது.

நாகை அமர நந்தீஸ்வரர் கோயில்: நாகை அமர நந்தீஸ்வரர் உடனுறை அபீதகுஜாம்பாள் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 15ம் தேதி அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கிய திருவிழாவில் 14ம் தேதி மகாலட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, 17ம் தேதி அஸ்திரதேவர் ஹோமம், 18ம் தேதி ஏகாதசருத்திரர் பூஜைகளும், ருத்ர ஹோமமும் நடந்தது. இதைதொடர்ந்து நேற்று கொடியேற்றம் நடந்தது. வரும் 23ம் தேதி வசந்த உற்சவம், 24ம் தேதி திருக்கல்யாணம், 26ம் தேதி சுவாமி அம்பாள் புறப்பாடு நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 27ம் தேதி நடக்கிறது.

28ம் தேதி தீர்த்தவாரி உற்சவம், 29ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் பூமிநாதன், தக்கார் மணவழகன், பார்வதீஸ்வரர் சிவனடியார்கள் திருக்கூட்டத்தினர் செய்துள்ளனர்.

Tags : Nagai ,East Sabarimala ,Iyappan Temple ,Panguni ,Pramorsava Arattu Festival Flag ,
× RELATED குடிசை வீடுகளில் தீ – பாஜகவினர் மீது வழக்கு பதிவு