×

பரமக்குடி திமுக வேட்பாளர் முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பு

பரமக்குடி, மார்ச் 20: பரமக்குடி மற்றும் நயினார்கோவில் பகுதிகளில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து திமுக வேட்பாளர் முருகேசன் ஆதரவு திரட்டினார். பரமக்குடி தொகுதி திமுக வேட்பாளர் முருகேசன் நேற்று பரமக்குடி நகர் பகுதியில் உள்ள மருத்துவர்கள் சங்கம், வியாபாரிகள் சங்கம், நெசவாளர்கள் அமைப்பு உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும்  முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். அதனைத் தொடர்ந்து முதுகுளத்தூர் திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பனை மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை போர்த்தினார்.

இதனைத்தொடர்ந்து நயினார்கோவில் ஒன்றிய திமுக ஊழியர் கூட்டத்தில் கலந்துகொண்டு, சாலை வசதிகள் உள்பட அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்றி கொடுப்பேன். அனைத்து கிராமங்களிலும் கூட்டு குடிநீர் தங்கு தடையின்றி கொண்டு வரப்படும். பேருந்து  வசதி இல்லாத கிராமங்களுக்கு பேருந்து வசதி செய்து கொடுக்கப்படும். நயினார்கோவில் ஆரம்ப சுகாதார நிலையம் முழுமையான மருத்துவ வசதிகளுடன் தரம் உயர்த்தப்படும்.  எனக் கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பொறுப்பாளர்கள் சக்தி, அண்ணாமலை, ஒன்றிய கவுன்சிலர் நாகநாதன், மாவட்ட இளைஞரணி துணை குமரகுரு, தொமுச அரசுமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Paramakudi DMK ,
× RELATED திருச்சி மத்திய சிறை நுழைவாயிலில் ரூ1.09...