சட்டமன்ற தேர்தலில் காவல்துறையினருடன் பணியாற்ற முன்னாள் ராணுவத்தினருக்கு அழைப்பு

கரூர், மார்ச்20: சட்டமன்ற தேர்தலில் காவல்துறையினருடன் இணைந்து பணியாற்ற முன்னாள் ராணுவத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:பல ஆண்டுகள் நம் நாட்டிற்காக தேசத்தின் பல்வேறு பகுதிகளில் பணி செய்துள்ள முன்னாள் ராணுவத்தினர்களுக்கு மீண்டும் சேவை செய்வதற்கு ஒரு வாய்ப்பாக தமிழகத்தில் ஏப்ரல் 6ம்தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் கரூர் மாவட்ட காவல்துறையினருடன் இணைந்து பணியாற்றுவதற்காக அனைவரும் முன்வர வேண்டும் என மாவட்ட காவல்துறை சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல் அமைதியான முறையிலும், பாதுகாப்பாகவும் நடைபெற உங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தேர்தல் பணி செய்பவர்களுக்கு தகுந்த ஊதியம் வழங்கப்படுவதுடன் அவர்கள் தேர்தலில் தபால் வாக்கு பதிவு பெறுவதற்கான ஏற்பாடுகளும் செய்து தரப்படும். எனவே, விருப்பம் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் கரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் 9489419599 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Stories:

>