மதுரை மாவட்ட 10 தொகுதிகளுக்கு 190 பேர் 293 மனுதாக்கல் இன்று வேட்புமனு பரிசீலனை

மதுரை, மார்ச் 20: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்.6ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி துவங்கி நேற்றுடன் முடிந்தது.  மதுரை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. திமுக, காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட், மதிமுக, பாஜ, மநீம, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின்  வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.  இதில் மேலூர் தொகுதியில் 18 பேர் 22 மனுக்களையும், மதுரை கிழக்கு தொகுதியில் 12 பேர் 22 மனுக்களையும், சோழவந்தான் தொகுதியில் 21 பேர் 32 மனுக்களையும் தாக்கல் செய்துள்ளனர். மேலும், மதுரை வடக்கு தொகுதியில் 19 பேர் 28 மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

 மதுரை தெற்கு தொகுதியில் 10 பேர் 21 மனுக்களையும், மதுரை மத்திய தொகுதியில் 18 பேர் 29 மனுக்களையும், மதுரை மேற்கு தொகுதியில் 29 பேர் 36 மனுக்களையும் தாக்கல் செய்துள்ளனர். திருப்பரங்குன்றம் தொகுதியில் 25 பேர் 37 மனுக்களையும், திருமங்கலம் தொகுதியில் 26 பேர் 36 மனுக்களையும், உசிலம்பட்டி தொகுதியில் 12 பேர் 26 மனுக்களையும் தாக்கல் செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் மொத்தம் 10 தொகுதிகளுக்கு 190 பேர், 293 மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இவற்றில் 234 ஆண்கள், 43 பெண்கள் மற்றும் 2 திருநங்கைகள் மனு தாக்கல் செய்திருக்கின்றனர்.   

  வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்தது. வேட்பு மனுக்கள் இன்று காலை 11 மணிக்கு பரிசீலனை நடைபெறுகிறது. இதில் வேட்பாளர்கள், அவர்களின் ஏஜென்டுகள் மட்டும் பங்கேற்கலாம். பொது பார்வையாளர் 6 பேர் மதுரை வந்துள்ளனர். அவர்கள் பரிசீலனை நடைபெறும் போது தேர்தல் அதிகாரியுடன் உடன் இருந்து கண்காணிப்பர். வேட்பு மனுக்கள் வாபஸ் பெற 22ம் தேதி கடைசி நாளாகும்.

Related Stories:

>