×

வேலூர், காட்பாடி உட்கோட்டத்தில் மாநில நெடுஞ்சாலையோர கால்வாய்கள் தூர்வாரும் பணி தீவிரம்-கோட்ட பொறியாளர் ஆய்வு

வேலூர் : வேலூர், காட்பாடி உட்கோட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலையோர கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கோட்ட பொறியாளர் சரவணன் ஆய்வு செய்தார். மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில், முன்ெனச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, ேபரூராட்சிகளில் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறையின் பராமரிப்பில் உள்ள கால்வாய்கள்  தூர்வாரும் பணிகள் ெநடுஞ்சாலைத்துறை ேகாட்ட பொறியாளர் சரவணன்  உத்தரவின்ேபரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல்,  வேலூர் உதவி ேகாட்ட பொறியாளர் பிரகாஷ் தலைமையில்  உதவிபொறியாளர் அசோக்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் மூலம்  கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.இந்நிலையில்  நேற்று வேலூர்- ஊசூர் சாலை, கிருஷ்ணகிரி- ராணிப்பேட்டை பழைய பாலாறு சாலை, அப்துல்லாபுரம்- அணைக்கட்டு சாலை, தெள்ளூர்-செம்பேடு  சாலை ஆகிய சாலைகளை 20 சாலை பணியாளர்களைக் கொண்டு 2 ேஜசிபி எந்திரம் இயந்திரத்தின் உதவியோடு கால்வாய்கள் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் காட்பாடியில் நடந்து வரும் கால்வாய் தூர்வாரும் பணிகளை கோட்ட ெபாறியாளர் சரவணன் நேற்று ஆய்வு செய்தார். உடன் உதவி கோட்ட பொறியாளர் சுகந்தி, உதவி பொறியாளர் பூவரசன் ஆகியோர் இருந்தனர்….

The post வேலூர், காட்பாடி உட்கோட்டத்தில் மாநில நெடுஞ்சாலையோர கால்வாய்கள் தூர்வாரும் பணி தீவிரம்-கோட்ட பொறியாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Gadbadi Subdistrict ,Vellore- Divisional Engineer Survey ,Vellore ,Gadpadi ,Katpadi ,Kota Engineer ,Dinakaran ,
× RELATED வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையம்...