கரூரில் அதிகபட்சமாக 90 பேர் மனு கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி முதலிடம் பெற்ற அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு

அரவக்குறிச்சி, மார்ச் 20: அரவக்குறிச்சி ஒன்றிய அளவில் ஒவ்வொரு ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில்விழிப்போடு இருப்போம், விரட்டுவோம் கொரோனாவை எனும் தலைப்பில் மாணவர்களுக்கு ஓவிய திருவிழா என்னும் பெயரில் போட்டி நடைபெற்றது. அரவக்குறிச்சி ஒன்றியத்திலுள்ள 90 பள்ளிகளில் இப்போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவர்களின் படைப்புகள் அரவக்குறிச்சியிலுள்ள வட்டார வள மையத்தில் ஓவிய ஆசிரியர்களால் பரிசீலிக்கப்பட்டது. இதில் அரவக்குறிச்சி ஒன்றியம்,அ.வெங்கடாபுரம் ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர் சச்சின் சின்னச்சாமி ஒன்றியத்தில் முதலிடம் பெற்றார்.

மாணவருக்கு அரவக்குறிச்சி வட்டார வள மையத்தில் வட்டார கல்வி அலுவலர் சித்ரா மற்றும் வட்டார கல்வி அலுவலர் விஜய கருணாகரன் மற்றும் ஆசிரியப் பயிற்றுநர் தினேஷ் ஆகியோர் ஷீல்டு, பதக்கம், சான்றிதழ் வழங்கி வாழ்த்தினர். முதலிடம் பெற்ற மாணவனுக்கு தலைமை ஆசிரியர் சாகுல்அமீது, மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories:

>