மாவட்டத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றியைத் தர வேண்டும் வீடு, வீடாக மூர்த்தி எம்எல்ஏ வாக்குசேகரிப்பு

மதுரை, மார்ச் 20: மதுரை கிழக்கு ெதாகுதியில் திமுக சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்எல்ஏ போட்டியிடுகிறார். கொளுத்தும் ெவயிலையும் பொருட்படுத்தாமல் ஒத்தக்கடை உள்ளிட்ட 30 கிராமங்களில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், கடந்த காலத்தில் ஆளும் கட்சியினர் ஓடி ஒளிந்த நேரத்தில் கூட 3 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நேரடியாக அரிசி வழங்கினோம். நிவாரண பொருட்கள் மற்றும் கபசுர குடிநீர் வழங்கி மக்களிடம் தொடர்பில் இருந்தோம். ஆனால், என்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்பியாக இருந்த போதும் சரி, தற்போதும் சரி கடந்த 10 ஆண்டுகளாக மக்களை சந்தித்ததே கிடையாது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏராளமான திட்டப்பணிகளை செய்துள்ளேன். வரும் காலத்திலும் தொகுதி மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வேன். எனவே, மாவட்டத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பிரசாரத்தில் மாவட்ட பொருளாளர் சோமசுந்தரபாண்டியன், அவைத் தலைவர் பாலசுப்ரமணியன், ஒன்றிய செயலாளர்கள் ரகுபதி, மதிவாணன், அணி அமைப்பாளர்கள் வக்கீல் கலாநிதி, வினோத், மதுரை மேற்கு ஒன்றிய சேர்மன் வீரராகவன், பொதுக்குழு உறுப்பினர் வடிவேல் முருகன், இலக்கிய அணி நேருபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Related Stories:

>