உசிலம்பட்டியில் திமுக கூட்டணி வேட்பாளர் கதிரவன் வேட்புமனு தாக்கல்

உசிலம்பட்டி, மார்ச் 20: சட்டமன்ற தேர்தலுக்கு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாளானா நேற்று திமுகவினர் தங்களது தோழமைக்கட்சியினருடன் இணைந்து, உசிலம்பட்டி மதுரைசாலை அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து வாக்குசேகரித்து கொண்டு பேரணியாக வந்தனர். தேவர்சிலைக்கு மாலை அணிவித்து உசிலம்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜ்குமாரிடம் கதிரவன் வேட்புமனு  தாக்கல் செய்தார்.  இந்த நிகழ்ச்சியில் மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் சேடபட்டி முத்தையா, திமுக ஒன்றிய செயலாளர் சுதந்திரம், மாவட்ட தலைமைக்குழு உறுப்பினர் சோலைரவி, மாநகர பொறுப்புக்குழு உறுப்பினர் இளமகிழன், மாவட்டநெசவாளர் அணி லிங்கசாமி, இளைஞரணி சரவெடிசரவணன், காங்கிரஸ் நிர்வாகி மகேந்திரன் உள்பட தோழமை கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

உசிலம்பட்டியில் அதிமுக, பார்வர்டு பிளாக், அமமுக, சுயேச்சை உள்பட 26 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். முன்னதாக உசிலம்பட்டி ஆர்டிஓ தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் சம்பந்தமான ஆவணங்களை தேர்தல் பொது பார்வையாளர் ஜோதியாதவ் திடீர் ஆய்வு செய்தார். அப்போது அவர், தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஆர்டிஓ ராஜ்குமாரிடம் கேட்டறிந்தார். இதில் உசிலம்பட்டி தாசில்தார் விஜயலட்சுமி உடனிருந்தார்.

Related Stories: