வடக்கு தொகுதியில் போட்டியிட திருவோடு ஏந்தி வந்த சுயேச்சையால் பரபரப்பு

 மதுரை, மார்ச் 20:  மதுரை வடக்குதொகுதியில் மதுபாட்டில்களுடன் சங்கரபாண்டி என்பவர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட மனு தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். கடைசி நாளான நேற்று பலரும் மனுதாக்கல் செய்தனர். இத்தொகுதியில் மட்டும் 10பேர் சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர்.  இந்நிலையில் மதுரை யாகப்பா நகரை சேர்ந்த அபுபக்கர்சித்திக் திருவோடு கையில் ஏந்தியபடி பிச்சைக்காரர் போல வேடம் அணிந்து வந்திருந்தார்.

கையில் ஊன்று கோல் வைத்திருந்தார். ரேஸ்கோர்ஸ் ரோட்டில் பேரிகாட் அமைந்த பகுதிக்கு வந்த அவர், அங்கிருந்தவர்களிடம் பிச்சை எடுத்தார். அவரை போலீசார், தடுத்து வேடத்தை களையச்செய்த, பின் வேட்புமனுதாக்கல் செய்ய அனுமதித்தனர். பின்னர் அவர் வடக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரேம்குமாரிடம், சுயேச்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>