×

சின்னாளபட்டியில் அனுமதியின்றி பிரசாரம் பாமக வேன் பறிமுதல் அதிமுகவினர் போலீசாருடன் வாக்குவாதம்

சின்னாளபட்டி, மார்ச் 20: சின்னாளபட்டியில் அனுமதியின்றி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக பாமக பிரசார வேனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான பாமக சார்பில் திலகபாமா போட்டியிடுகிறார். இவர் நேற்று தனது ஆதரவாளர்களுடன் சின்னாளபட்டி பகுதியில் அனுமதியின்றி வேனில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். தகவலறிந்து தேர்தல் பறக்கும் படையினர், போலீசார் வந்து எச்சரிக்கை விடுத்ததையடுத்து வேட்பாளர் திலகபாமா சித்தையன்கோட்டை பகுதிக்கு கார் மூலம் சென்று விட்டார்.

பின்னர் பகல் 12.30 மணியளவில் சின்னாளபட்டி கஸ்தூரி மருத்துவமனை அருகே பாமக பிரசார வேன் சென்றது. இதை கவனித்த பறக்கும் படையினர் உடனே வேனை பறிமுதல் செய்து சின்னாளபட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் செய்தனர். போலீசார் வேன் டிரைவர் பாண்டீஸ்வரனை கைது செய்து, பிறகு ஜாமீனில் விடுவித்தனர். இதற்கிடையே சின்னாளபட்டி நகர அதிமுகவினர்,  பாமகவினர் பிரசார வேனை திரும்ப தரும்படி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு போலீசார் பிரசார வேனை கோர்ட்டில் ஒப்படைத்து விடுவோம், கோர்ட்டில் அபராத தொகையை செலுத்தி விட்டு எடுத்து கொள்ளுங்கள் என கூறியதாக தெரிகிறது. பின்னர் சிறிதுநேரத்தில் மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில் பிரசார வேன் பாமகவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags : Chinnalapatti ,AIADMK ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...