×

கும்மிடிப்பூண்டியில் அரசு கல்லூரி, ஜவ்வரிசி தொழிற்சாலை அமைத்து தரப்படும்: திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் வாக்குறுதி

கும்மிடிப்பூண்டி, மார்ச் 20: கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் தனது தேர்தல் பிரசாரத்தை தமிழகத்தின் ஈசானி மூலை எனப்படும் தமிழக - ஆந்திர எல்லையான ஆரம்பாக்கத்தில் முக்தி விநாயகர் ஆலயத்தில் வழிபட்டு, திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் கி.வேணு தலைமையில் துவக்கினார். இந்த பிரசாரத்தில் திமுக நிர்வாகிகள் முன்னாள் இ.ஏ.பி.சிவாஜி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கி.வே.ஜி.உமா மகேஷ்வரி, பொறுப்பு குழு உறுப்பினர் வெங்கடாசலபதி, ஒன்றிய செயலாளர் மணிபாலன், கி.வே.ஆனந்தகுமார், காங்கிரஸ் கட்சி மாநில துணை செயலாளர் சம்பத், பெரியசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் துளசிநாராயணன், ரவிக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட தலைவர் கோபி நயினார், நேசகுமார் உள்ளிட்டோர் முன்னிலையில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, ஆரம்பாக்கம், பாட்டைக்குப்பம், நொச்சிக்குப்பம், பெத்தானியா குப்பம், வெங்கடேச பெருமாள் குப்பம் ஆகிய மீனவ கிராமங்களில் ஊர் கோயிலில் அமர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும், ஆரம்பாக்கத்தில் ஊராட்சி செயலாளர் மனோகரன் முன்னிலையிலும், தோக்கம்மூர் ஊராட்சியில் மாவட்ட விவசாய அணி நிர்வாகி மணி ஏற்பாட்டில், திமுக நிர்வாகிகள் அங்கமுத்து, விஜயகுமார் முன்னிலையிலும், எகுமதுரை ஊராட்சியில் ஒன்றிய நிர்வாகி மஸ்தான் ஏற்பாட்டிலும், பூவலை ஊராட்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் அருள், செங்கல்வராயன் ஏற்பாட்டிலும், நேமளூர் ஊராட்சியில் மாவட்ட இலக்கிய அணி நிர்வாகி மனோகரன் ஏற்பாட்டிலும், மாதர்பாக்கத்தில் ஊராட்சி தலைவர் சீனிவாசன் ஏற்பாட்டிலும், மாநெல்லூர் பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் லாரன்ஸ் ஏற்பாட்டிலும் திமுக வேட்பாளர் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது, திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் பேசியதாவது, “திமுக ஆட்சி அமைந்ததும் கும்மிடிப்பூண்டியில் அரசு கல்லூரி கொண்டுவரப்படும். கும்மிடிப்பூண்டியில் கிழங்கு பயிரிடுதல் அதிகமாக உள்ள நிலையில் ஜவ்வரிசி தொழிற்சாலை கொண்டு வரப்படும். சிப்காட் தொழிற்பேட்டைகளில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும்” என்றார். அப்போது, அங்கு கூடியிருந்த பொதுமக்கள் ஆரவாரத்துடன் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

Tags : Government College ,Jawaharlal Nehru Factory ,Gummidipoondi ,DMK ,DJ Govindarajan ,
× RELATED கோணம் அரசு பொறியியல் கல்லூரியில்...