×

26 வேப்பம்பட்டு ஊராட்சியில் குறைந்த மின் அழுத்தத்தை போக்க துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்: பூந்தமல்லி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.கிருஷ்ணசாமி வாக்குறுதி

திருவள்ளூர், மார்ச் 20: பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.கிருஷ்ணசாமி 26 வேப்பம்பட்டு ஊராட்சியில் வீதி, வீதியாக நடந்து சென்று உதயசூரியன் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது, “26 வேப்பம்பட்டு ஊராட்சியில் நிரந்தரமாக குடிநீர் பிரச்னையை தீர்த்து வைப்பேன். குறைந்த மின் அழுத்தத்தை போக்கும் வகையில் துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்வேன். வீட்டுமனை இல்லாத ஏழைகளுக்கு இலவச வீட்டு மனைகள் பெற்றுத் தருவேன். நகர் பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்காத வகையில் மழைநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கைகளை மேற்கொள்வேன்” என்றார்.

இந்த வாக்கு சேகரிப்பில் காங்கிரஸ் செயல் தலைவர் டாக்டர் கே.ஜெயக்குமார் எம்பி, மாவட்ட தலைவர் திருவேற்காடு லயன் டி.ரமேஷ், மாவட்ட துணைத் தலைவரும், தொகுதி பொறுப்பாளரும், 26 ஊராட்சி மன்ற தலைவருமான சதாபாஸ்கரன், திமுக ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன், ஒன்றிய குழு பெருந்தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், வக்கீல் பாஸ்முருகன், காங்கிரஸ் வட்டார தலைவர்கள் அன்பழகன், முரளி, ரமேஷ், திமுக நிர்வாகிகள் த.எத்திராஜ், கே.கே.சொக்கலிங்கம், மகேஸ்வரி பாலவிநாயகம்a, முரளி, ஏழுமலை, எஸ்.ஜெயபாலன், எஸ்.பிரேம்ஆனந்த், தொழுவூர் பா.நரேஷ்குமார், டி.டி.தயாளன்,

பொன்.விமல்வர்ஷன், வி.ஹரி, ஆர்.மோகன், விநாயகம், வேல்முருகன், ரவி, ஜோசப், பா.சாந்தகுமார், வக்கீல் ச.பிரேம்குமார், மூர்த்தி, தீபன், சிகாமணி உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் நத்தமேடு, அயத்தூர், தொட்டிக்கலை, கிளாம்பாக்கம், ஆயலூர் உள்பட பல்வேறு கிராமங்களில் வீதி, வீதியாகச் சென்று தீவிரமாக வாக்கு சேகரித்தார்.

Tags : Veppampattu panchayat ,Poonamallee ,DMK ,A. Krishnasamy ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி