×

அதிமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கி உடுமலை தொகுதியில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் பிரசாரம்

உடுமலை, மார்ச் 20: உடுமலை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுகிறார்.  அவர் நேற்று முன்தினம் பீக்கல்பட்டி, பண்ணைக்கிணர், கோழிக்குட்டை, சங்கம்பாளையம், சங்கம்பாளையம் காலனி, கோமங்கலம், கோமங்கலம்புதூர், தெற்கு காலனி, எஸ்.மலையாண்டிபட்டணம், சீலக்காபட்டி, நல்லாம்பள்ளி ஆகிய இடங்களில் திறந்த வேனில் சென்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் அதிமுக ஆட்சியில் உடுமலை தொகுதியில் நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்களை விளக்கி பிரசாரம் செய்தார். அவர் கூறியதாவது: உடுமலை நகராட்சியின் 100 ஆண்டையொட்டி ரூ.50 கோடி நிதி வழங்கப்பட்டது.

 மத்திய பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டது. உடுமலை அரசு மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்படும் தலைமை மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டது. வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் தலைமை அலுவலகமாக மாறியது. நாராயணன் காலனி முதல் திருப்பூர் சாலை ஏரிப்பாளையம் வரையும், தங்கம்மாள் ஓடை முதல் ராஜவாய்க்கால் வரையும் கான்கிரீட் கால்வாய் அமைக்கப்பட்டது. உடுமலை நகரில் 5 பூங்காக்கள் அமைக்கப்பட்டன. வாரச்சந்தை நவீன முறையில் விரிவாக்கம் செய்யப்படடது. நகராட்சி முழுவதும் சீரான சாலைகள் அமைக்கப்பட்டன. இதுபோன்று ஏராளமான நலத்திட்ட பணிகளை நிறைவேற்றி உள்ளோம். இவ்வாறு அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேசினார்.

Tags : Minister ,Radhakrishnan ,Udumalai ,AIADMK ,
× RELATED ஒன்றியத்தில் சமதர்ம ஆட்சி அமைந்திட...