கறிக்கோழி உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளிடம் பல்லடம் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன் ஆதரவு திரட்டினார்

திருப்பூர், மார்ச் 20: பல்லடம் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.பல்லடம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் போட்டியிடுகிறார். இதையொட்டி எம்.எஸ்.எம். ஆனந்தன் தொகுதிக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், நேற்று பல்லடம் கறிக்கோழி உற்பத்தியாளர் சங்க தலைவர் சுவாதி சின்னசாமி மற்றும் பல்லடம் நகர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஆனந்த செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

அப்போது பல்லடம் எம்எல்ஏ கரைப்புதூர் நடராஜன், முன்னாள் எம்எல்ஏ பரமசிவம், பல்லடம் நகர கழக செயலாளர் ராமமூர்த்தி, பல்லடம் நகர முன்னாள் துணைத் தலைவர் வைஸ் பழனிசாமி, பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு கூட்டணி கட்சிகளின் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தேர்தல் பணிமனையில் நடந்தது. இதில் மண்டல வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.  கூட்டத்தில் எம்.எஸ்.எம். ஆனந்தன் பேசுகையில், ‘‘தேர்தல் பணிகளை விரைவாகவும், முறையாகவும் மேற்கொள்ளவே அனைத்துக் கட்சியினர் உள்ளடக்கிய மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் வெற்றி எளிது என நினைக்காமல் உற்சாகமாகவும், விழிப்புடனும் பணியாற்ற வேண்டும்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு எண்ணற்ற சாதனைகளை செய்துள்ளது. அதிமுக ஆட்சியில் பல்லடம் சட்டமன்ற தொகுதி 100 சதவீதம் தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாறி உள்ளது. இதை மக்களிடம் முறையாக எடுத்து சென்றாலே எளிதாக வெற்றி பெறலாம்’’ என்றார்.  இதில், மாவட்ட துணை செயலாளர் சண்முகம், ஒன்றிய செயலாளர்கள் பழனிசாமி, சித்துராஜ், சிவப்பிரகாஷ், அணி செயலாளர் சிவாச்சலம், புத்தரச்சல் பாபு, சி.டி.சி.பழனியப்பன், சிராஜ்தீன், மோகன்ராஜ், பகுதி செயலாளர்கள் பண்ணையாளர் பழனிசாமி, சுரேந்திரன், மகளிரணி செயலாளர் சித்ராதேவி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>