×

காங்கயம், தாராபுரம் தொகுதிகளில் கனிமொழி எம்.பி. இன்று தேர்தல் பரப்புரை

காங்கயம், மார்ச் 20: காங்கயம், தாராபுரம் தொகுதிகளில் கனிமொழி எம்.பி. இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார்.  திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினரும், திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திமுக மகளிர் அணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி, சட்டமன்ற தேர்தல் பரப்புரைக்காக 20ம் தேதி (இன்று) திருப்பூர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட காங்கயம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

 தாராபுரம் தொகுதியில் காலை 11 மணிக்கு, குண்டடம் மேற்கு ஒன்றியம், குண்டடம், காவல் நிலைய ரவுண்டானாவிலும், மாலை 4 மணிக்கு தாராபுரம் நகரம், காவல் நிலையம் அருகிலும்,  மாலை 6 மணிக்கு மூலனூர் ஒன்றியம் வடுகபட்டி கார்னர் பகுதியிலும் பரப்புரையில் ஈடுபடுகிறார். காங்கயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளக்கோவில் நகரம், வெள்ளக்கோவில் கடைவீதியில் இரவு 7 மணிக்கும், இரவு 8 மணிக்கு முத்தூர் ரவுண்டானா பகுதிகளில் தேர்தல் பரப்புரை நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், தோழமை கட்சி நிர்வாகிகள் அனைவரும் இதனை அழைப்பாக ஏற்றுக்கொண்டு கலந்து கொள்ள வேண்டுகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Kanimozhi ,Kangayam ,Tarapuram ,
× RELATED திமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர்...