×

மாவட்டத்தில் 2-வது முறையாக கொரோனா பாதிப்பு 100-ஐ கடந்தது

கோவை, மார்ச் 20: கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் 2வது முறையாக கொரோனா பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது. அதன்படி, நேற்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் சென்னை, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கோவையில் கடந்த 17-ம் தேதி 108 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, தற்போது நடப்பாண்டில் இரண்டாவது முறையாக  கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களின் 100-ஐ கடந்துள்ளது.

அதன்படி,  நேற்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 917-ஆக உயர்ந்தது. மேலும், நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்று வந்த 54 பேர் முழுமையாக குணமடைந்த நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த நபர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்து 641-ஆக உள்ளது.
தற்போது, கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ, தனியார் மருத்துவமனையில் மொத்தம் 590 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். மேலும், கொரோனாவால் நேற்று யாரும் உயிரிழக்கவில்லை. இதனால், மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 686-ஆக உள்ளது.

Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்