ஈரோடு மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் முத்துசாமி கிராமப்புற பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பு

ஈரோடு, மார்ச்20: ஈரோடு மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் முத்துசாமி கிராமப்புற பகுதிகளில் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஈரோடு மேற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முத்துசாமி கதிரம்பட்டி, நஞ்சனாபுரம், பவளத்தாம்பாளையம், சின்னமேடு, வேப்பம்பாளையம் உள்ளிட்ட கிராமப்புறங்களிலும், நசியனூர் பேரூராட்சி பகுதிகளிலும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று நேற்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வேட்பாளர் முத்துசாமி பேசியதாவது, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை காக்கவும், குறிப்பாக பெண்களின் மேம்பாட்டிற்காக திமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது.

இதே போல விவசாயிகளின் நலன் காக்கவும் பல்வேறு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற வேண்டுமெனில் திமுக தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைய வேண்டும். பொதுமக்களிடம் பெறப்பட்டுள்ள புகார் மற்றும் கோரிக்கை மனுக்கள் அனைத்தும் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற நாளில் இருந்து100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள் மிகவும் குறைவாக உள்ளது. சாலை, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்டவைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இதே போல சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய திட்டங்கள் வகுக்கப்படும். நகரங்களுக்கு இணையாக கிராமப்புறங்களிலும் அனைத்து வசதிகளும் மேம்படுத்த திமுக நடவடிக்கை எடுக்கும். எனவே வாக்காளர்களாகிய நீங்கள் வருகின்ற தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முத்துசாமி பேசினார்.

Related Stories: