×

அமமுக மூத்த நிர்வாகி மரணம்: டிடிவி இரங்கல்

சென்னை: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: புகழ்பெற்ற கல்வியாளரும், அமமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரும், எனது இனிய நண்பரும், உறவினருமான பேராசிரியர் முருகேசன் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். ஏழை மாணவர்கள் உயர்கல்வி பெறவேண்டும் என்பதற்காக கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர் பேராசிரியர் முருகேசன்.

ஏழை, எளிய குடும்பத்தினரின் வாழ்வில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்திட வேண்டும் என்ற உள்ளார்ந்த அக்கறையோடும் ஈடுபாட்டோடும் உழைத்தவர். அவரது மறைவு கல்வித்துறைக்கும், கழகத்திற்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் மிகப்பெரிய இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Ammu ,DTV ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...