பாலியல் புகாரில் சிக்கியுள்ள டாக்டர் சந்திரசேகரை கைதுசெய்ய வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சந்திரசேகர் அங்கு பயிலும் முதுநிலை மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்துள்ளார். இதுகுறித்து புகார் அளித்த பிறகும் சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

பாதிக்கப்பட்ட மாணவிகள் போராட்டம் நடத்த முனைந்த பின்னரே, விசாரணைக்குழு அமைக்கப்பட்டு பாலியல் புகாருக்கு முகாந்திரம் இருப்பதாக அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வளவுக்கும் பிறகும், சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்வதற்கு மாறாக, பணியிட மாறுதல் மட்டும் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் இத்தகைய அணுகுமுறை அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும்.

Related Stories:

>