திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கே.எஸ்.அழகிரி இன்று முதல் சுற்றுப்பயணம்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று முதல் தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். அதன்படி, இன்று காலை 10.30 மணிக்கு திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்த பின்பு வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானாவை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து துறைமுகம் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார்.  21ம் தேதி காலை கொளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலினை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். தொடர்ந்து பொன்னேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் துரை சந்திரசேகரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

22ம் தேதி ஸ்ரீபெரும்புதூர், சோளிங்கர் தொகுதியிலும், 23ம் தேதி காட்பாடி, ஊத்தங்கரை தொகுதிகளிலும், 24, 25ம் தேதிகளில் கள்ளக்குறிச்சி தொகுதியிலும் பிரசாரம் செய்கிறார். 26ம் தேதியில் பென்னாடம், விருத்தாசலம் தொகுதிகளிலும், 27ம் தேதி வடலூர், பண்ருட்டி தொகுதிகளிலும், 28ம் தேதி கடலூர், புவனகிரி, சிதம்பரம் தொகுதிகளிலும், 29ம் தேதி காட்டுமன்னார்கோவிலும் பிரசாரம் செய்கிறார். 30ம் தேதி மயிலாடுதுறையில் பிரசாரம் செய்த பின் ரயில் மூலம் ஈரோடு பயணம் செய்து அங்கு பிரசாரம் செய்கிறார்.  31ம் தேதி ஈரோடு, உடுமலைப்பேட்டை, கோவை தொகுதிகளிலும் பிரசாரம் செய்கிறார்.

ஏப்ரல் 1ம் தேதி கோவை தெற்கு, உதகமண்டலம் தொகுதிகளிலும், 2ம் தேதி உதகமண்டலத்தில் இருந்து ரயில் மூலம் கோவைக்கும், அங்கிருந்து ரயில் மூலம் மதுரைக்கும் பயணம் செய்கிறார். 3ம் தேதி மதுரை, மேலூர் தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.

Related Stories:

More
>