×

மாநகராட்சியுடன் மூவரசம்பட்டு இணைக்கப்படும்: தா.மோ.அன்பரசன் வாக்குறுதி

ஆலந்தூர்: ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசன் நேற்று மூவரசம்பட்டு ஊராட்சியில் உள்ள நலசங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டினார். இதில் நல சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஆர்.எஸ்.கண்ணன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் உதயகுமார், விஜயகுமார், வனசுந்தரம், ஜி.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூவரசம்பட்டு ஊராட்சி மன்ற முன்னாள் திமுக தலைவர் ஜி.கே.ரவி வரவேற்றார். அப்போது தா.மோ.அன்பரசன் பேசுகையில், ‘‘இந்த பகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. உங்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி தந்துள்ளேன்.

தொடர்ந்து ஆதரவளித்து என்னை வெற்றி பெறச் செய்தால் வளச்சி திட்ட பணிகளை நிறைவேற்றி தருவேன். மூவரசம்பட்டு ஊராட்சி குளத்தை சுற்றி ₹49 லட்சத்தில் தடுப்பு சுவர் மற்றும் நடைபாதை அமைத்துள்ளேன். ₹8.63 லட்சத்தில் காரிய மண்டபம் கட்டியுள்ளேன். மூரசம்பட்டு கிளை நூலக கட்டிடம் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்காக ₹3.65 லட்சம் வழங்கி உள்ளேன். மூவரசம்பட்டு கோகுல் நகர் 2வது மெயின் ரோட்டில் ₹10 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைத்துள்ளேன். மேலும், பட்டா பிரச்னை, குப்பை பிரச்னை போன்றவற்றிற்கு நிரந்தர தீர்வு காண்பேன். என்னை வெற்றி பெறச் செய்வதன் மூலம் தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமையும். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

உங்களது பிரதான கோரிக்கையான  மூவரசம்பட்டு ஊராட்சி மாநகராட்சியுடன்  இணைக்கப்படும்,’’ என்றார். கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் எம்.கே.பழனி, ஜி.கே.பிரபாகரன், பிரசாத், நலச் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Trio ,Thamo Anparasan ,
× RELATED கடன் பிரச்னையில் பார் ஊழியர் மனைவி, மகனுடன் தற்கொலை