திருச்சி மேற்கு தொகுதியில் அதிக திட்டங்களை செயல்படுத்த மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்

திருச்சி, மார்ச் 19: திருச்சி மேற்கு தொகுதியில் மேலும் அதிக திட்டங்களை செயல்படுத்த மீண்டும் எனக்கு வாய்ப்பளியுங்கள் என்று திமுக வேட்பாளர் கே.என்.நேரு குடியிருப்போர் நலச்சங்கள் பிரதிநிதிகளிடம் ஆலோசனை நடத்தி பிரசாரம் செய்தார். திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரும், திமுக முதன்மை செயலாளருமான கே.என்.நேரு நேற்று காலை வயலூர் ரோடு குமரன் நகர் சரஸ்வதி பாலமந்திர் குடியிருப்போர் அனைத்து நல சங்க நிர்வாகிகளை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். பின்னர் அப்பகுதிமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது கே.என்.நேரு கூறியதாவது: பொதுமக்களின் நலனுக்காக உறையூரிருந்து வயலூர் செல்லும் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு விரிவுபடுத்தப்படும். மேலும் திமுக ஆட்சி அமைந்தவுடன் இப்பகுதியில் குடிநீர் வசதி, பாதாள சாக்கடை திட்டங்களுக்காக அதிக நிதி கேட்டு அத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். ஏற்கனவே இந்த தொகுதியில் நின்று வெற்றி பெற்று, இந்த ஆட்சியை மீறி நிதி கேட்டு பெற்று மக்களுக்கு செயல்படுத்த நடவடிக்கை எடுத்தேன். தற்போது மீண்டும் இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன். பொதுமக்கள் மீண்டும், திமுக ஆட்சியில் அதிகமான திட்டங்களை செயல்படுத்த வாய்ப்பளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.அப்போது திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, திருச்சி மாநகர செயலாளர் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories:

>