லால்குடி தொகுதி திமுக வேட்பாளர் சவுந்தரபாண்டியன் வேட்பு மனு தாக்கல்

லால்குடி, மார்ச் 19: லால்குடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சவுந்தரபாண்டியன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக லால்குடி ரவுண்டானா பகுதியில் இருந்து லால்குடி,புள்ளம்பாடி ஒன்றியம் பகுதியிலிருந்து கூட்டணி கட்சியினர், மகளிரணியினர் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஊர்வலமாக லால்குடி ஆர்டிஓ அலுவலகம் வரை சென்றனர். அதனைத் தொடர்ந்து லால்குடி தேர்தல் நடத்தும் அதிகாரி வைத்தியநாதனிடம் திமுக வேட்பாளர் சவுந்தரபாண்டியன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதில் லால்குடி வடக்கு ஒன்றிய சேர்மன் ரவிச்சந்திரன், லால்குடி நகர செயலாளர் துரைமாணிக்கம், வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வன், வழக்கறிஞர் தமிழரசன், ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.அதனைத் தொடர்ந்து கூடியிருந்த தொண்டர்கள் உற்சாகத்துடன் சவுந்தரபாண்டியனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னதாக லால்குடி மற்றும் புள்ளம்பாடி ஒன்றிய கிராமங்களில் சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். இதில் புள்ளம்பாடி ஒன்றிய சேர்மன் ரசியா கோல்டன் ராஜேந்திரன், வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராசா பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், மணிமாறன், மதிமுக புள்ளம்பாடி நகர செயலாளர் முத்துக்குமார் மாவட்ட கவுன்சிலர் ஜெயலட்சுமி கருணாநிதி, ஒன்றிய கவுன்சிலர்கள் வடிவேல் சுதா பெரியசாமிமற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Related Stories:

More