பேராவூரணி அரசு பள்ளி மாணவிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கல்

பேராவூரணி, மார்ச் 19: தஞ்சை மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி சார்பில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தற்போது மீண்டும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் மாணவிகள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி கொள்ளக்கூடாது. கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். கைகள் மூலம் மூக்கு, கண்களை தொடக்கூடாது. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கொரோனா விழிப்புணர்வு கோலம் வரையப்பட்டு, 500 மாணவிகளுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. பேரூராட்சி சார்பில், செயல் அலுவலர் மணிமொழியன் ஆலோசனையின்படி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் சுகுணா தலைமை வகித்தார். பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அன்பரசன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி இளநிலை உதவியாளர் ராஜேஷ், பேரூராட்சி பணியாளர்கள், டெங்கு களப்பணியாளர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள், பள்ளி மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>