வம்பன் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் ஆலங்குடி திமுக வேட்பாளர் மெய்யநாதன் உறுதி

அறந்தாங்கி, மார்ச் 19: ஆலங்குடி சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் ஆலங்குடியில் நடந்தது. தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ரகுபதி எம்எல்ஏ தலைமை வகித்தார். திருவரங்குளம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் தங்கமணி முன்னிலை வகித்தார். ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளர் மெய்யநாதன் பேசியதாவது: நான் எம்எல்ஏ ஆனவுடன் தொகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் வம்பனில் சிப்காட் தொழிற்பேட்டை, கீரமங்கலத்தில் குளிர்சாதன கிட்டங்கி, காய்கறி- மலர் ஏற்றுமதி மண்டலம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். கீரமங்கலத்தை தனி ஊராட்சி ஒன்றியமாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன்.

ஆலங்குடி தொகுதிக்கு தேவையான அனைத்தையும் பெற்று தருவேன். எனவே திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் உழைத்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்ய வைக்க வேண்டும் என்றார். தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராமசுப்புராம், மாநில பொதுக்குழு உறுப்பினர் மகாதேவன், திராவிடர் கழக மூத்த தலைவர் ராவணன், இந்திய கம்யூனிட் மாவட்ட செயலாளர் மாதவன், முன்னாள் மாவட்ட செயலாளர் செங்கோடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கர், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் சசிகலைவேந்தன், திருவரங்குளம் ஒன்றியக்குழு தலைவர் வள்ளியம்மை தங்கமணி, திருவரங்குளம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளங்கோவன், ஆலங்குடி நகர திமுக செயலாளர் பழனிகுமார், கீரமங்கலம் நகர திமுக செயலாளர் சிவக்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Related Stories: