×

விவசாயிகளுக்கு உப்பு கரைசல் தயாரிப்பு செயல்விளக்கம்

பொன்னமராவதி, மார்ச் 19: இலுப்பூர் வேளாண் கல்லூரி மாணவர்கள் கிராமத்தங்கல் திட்டத்தின்கீழ் கிராம புறங்களில் தங்கி விவசாயிகளின் அனுபவம், அவர்கள் கடைபிடித்து வரும் வேளாண் தொழில்நுட்பங்கள், இயற்கை முறையினான விவசாயம் குறித்து களப்பயிற்சி பெற்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஆலவயல் கிராமத்தில் விவசாயிகளுக்க உப்பு கரைசல் மற்றும் முட்டை அமினோ அமில கரைசல் தயாரிக்கும் முறை குறித்து செயல்விளக்கம் அளித்தனர். அப்போது உப்புக்கரைசலின் மூலம் விதை நேர்த்தி, முட்டை அமினோ அமிலம் கரைசல் மூலம் பூக்கும் பருவத்தில் பூக்கள் உதிர்வதை தடுக்கும் முறை குறித்து விளக்கினர்.

Tags :
× RELATED மாநகர பேருந்துகளில் மின்னணு...