மர்மநபர்களுக்கு வலைவீச்சு புதுக்கோட்டை மருத்துவ கல்லூரிக்கு செல்லும் வழியில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தப்படுமா?

புதுக்கோட்டை, மார்ச் 19: புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரிக்கு செல்லும் வழியில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட தலைமை மருத்துவனை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இதன்பிறகு அனைத்து மருத்துவ பிரிவுகளும் புதிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தஞ்சாவூர் சாலையில் கால்நடை பண்ணை அருகே அமைந்துள்ளது. இதில் பிருந்தாவனம், மச்சுவாடி வரை தெருவிளக்குள் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் செல்லும் நோயாளிகள், அவர்களது உறவினர்கள் எந்தவித அச்சமின்றி சென்று வருகின்றனர். ஆனால் அண்டக்குளம் முக்கத்தில் இருந்து மருத்துவக்கல்லூரி வரை 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் அச்சத்துடன் செல்கின்றனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகள் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>