பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஊடகசான்று, கண்காணிப்பு குழு மையம் அமைப்பு

பெரம்பலூர், மார்ச் 19: பெரம்பலூரில் தேர்தலையொட்டி அமைக்கப்பட்ட ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புகுழு மையத்தை பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி பொதுப் பார்வையாளர் மதுரிமா பருவா சென் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய சட்ட மன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் அமைதியான முறையில் நடத்திட பறக்கும் படை, நிலைக் கண்காணிப்புக் குழு, கணக்குக்குழு, கூர்ந்தாய்வுக் குழு உள்ளிட்ட குழுக்களை அமைத்து தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. வேட் பாளர்களின் தேர்தல் செலவினங்களை கண்காணித்திட சிறப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது, நாளிதழ்கள், உள்ளூர் தொலைக்காட்சி, ரேடியோ போன்றவற்றில் வெளியிடப்படும் விளம்பரங்கள், ஊடகச்சான்று குழுவின் அனுமதி பெற்ற பின்னரே வெளியிட வேண்டும் என அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் அனைவருக்கும் வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சியினரால் முன் அனுமதியின்றி நாளிதழ்கள் மற்றும் தொலைக் காட்சிகளில் வெளியிடப்படும் விளம்பரங்கள் மற்றும் தேர்தல் விதிமீறல்களைக் கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஊடகச்சான்று மற்றும் கண்காணிப்புக்குழு மையத்தை பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்கு, இந்தியத் தேர்தல் ஆணையத்தால் பொதுப்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள மதுரிமா பருவாசென் நேற்று பார்வையிட்டு ஆய்வுசெய்தார். இந்த ஆய்வின்போது ஊடக சான்று மற்றும் கண்கணிப்பு குழு அலுவலர் நாகராஜ பூபதி, தேர்தல் நடத்தை விதிகள் பொறுப்பு அலுவலர் முனியசாமி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சுதாகர் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories:

>