பெரம்பலூர், குன்னம் தொகுதியில் 38 வேட்புமனு தாக்கல்

பெரம்பலூர், மார்ச் 19: பெரம்பலூர், குன்னம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட இதுவரை 38 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட நேற்று பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான சப்.கலெக்டர் பத்மஜாவிடம் ஐஜேகே, புதியதமிழகம், தேமுதிக ஆகியக் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் ஒரே நாளில் அடுத்தடுத்து மனுத்தாக்கல் செய்தனர். இதன்படி மக்கள் நீதிமய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக் கட்சி ஆகிய கூட்டணிகளின் சார்பாக, இந்திய ஜனநாயகக்கட்சி வேட்பாளர் சசிகலா வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அப்போது கட்சியின் மாவட்ட தலைவர் ரகுபதி, மக்கள் நீதிமையம் கட்சி யின் மாவட்ட செயலாளர் செந்தில் ஆகியோர் உடனிருந்தனர். தேமுதிக கட்சி மற்றும் அமமுக கட்சிகளின் கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளர் ராஜேந்திரன் மனு தாக்கல் செய்தார். அவருடன் தேமுதிக மாவட்டச் செயலாளர் துரை காமராஜ், அமமுக மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் புதியதமிழகம் கட்சியின் சார்பாக களரம்பட்டியை சேர்ந்த மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ராதிகா வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் கட்சியின் மாவட்ட செயலாளர் பாலாஜி தேவேந்திரன் உடனிருந்தார். இன்று (19ம் தேதி) மனு தாக்கல் செய்யக் கடைசி தேதியாகும். இன்று சுயேட்சை வேட்பாளர்கள், டம்மி வேட்பாளர்கள் அதிகஅளவில் மனுத்தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்கு இதுவரை 16 விண்ணப்பங்கள் விநியோகிக்கப் பட்டுள்ளது. இதில் 10 விண்ணப்பங்கள் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குன்னம் சட்டமன்ற தொகுதியில் இதுவரை 37 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு, அதில் 18 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

More
>