பேரூராட்சி எச்சரிக்கை குப்பைக்கு வைத்த தீ பரவி 2 கூரை வீடுகள் சாம்பல்

மயிலாடுதுறை, மார்ச் 19: மயிலாடுதுறை அருகே குப்பைக்கு வைத்த தீ பரவி 2 கூரை வீடுகள் சாம்பலானது. மயிலாடுதுறை அருகே உள்ள குரங்குபுத்தூர் காவேரிக்கரை தெருவை சேர்ந்தவர் ரவி (44). இவரது வீட்டின் எதிர்புறத்தில் குப்பைகள் குவிந்து கிடந்தது. இந்த குப்பையை நேற்று முன்தினம் காலை மர்மநபர்கள் கொளுத்தி விட்டனர். அதில் வீசிய காற்றால் தீப்பொறி பறந்து ரவியின் கூரை வீடு தீப்பற்றி எரிந்தது. மேலும் அருகில் இருந்த அகோரம் என்பவரது வீட்டுக்கும் பரவி தீ எரிந்தது. இந்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மேலும் தீ பரவாமல் போராடி அணைத்தனர். தீவிபத்தில் 2 வீடுகளில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது.

Related Stories:

>