×

குளித்தலை தொகுதியில் 7 பேர் மனுத்தாக்கல்

குளித்தலை, மார்ச் 19: குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் சப்கலெக்டர் ஷேக்அப்துல்ரகுமானிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக அவரது சகோதரர் வக்கீல் மகேந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து சுயேச்சையாக தென் கடைகுறிச்சி சுரேஷ், ஜி.உடையாபட்டி அலெக்ஸ் மொரிஸ், ஐஜேகே வேட்பாளர் மணிகண்டன், மாற்று வேட்பாளர் சுரைக்காய்பட்டி முத்துச்செல்வன், திப்புசுல்தான் கட்சி மாவட்ட தலைவர் சுபேதர் சுயேச்சையாகவும் வேட்புமனு தாக்கல் செய்தனர். மதியம் திரிணாமுல் காங்கிரஸ் நகர செயலாளர் மனோகரன் தாக்கல் செய்தார். நேற்று மட்டும் 7 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். மொத்தம் இதுவரை குளித்தலை தொகுதிக்கு 14 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags : Kulithalai constituency ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...