×

மதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் சாத்தூர் ராமச்சந்திரன் பங்கேற்பு

சாத்தூர், மார்ச் 19: சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் மதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் டாக்டர் ரகுராமன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து  வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது, ‘‘ஆட்சியை மாற்ற மக்கள் தயாராக இருக்கிறார்கள். உதய சூரியன் வெற்றியடையும். அதிமுக அரசு 10 சதவீதத்தை ஒதுக்கீடு செய்ததால் இந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் வேலைக்கு போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதை போக்க திமுக ஆட்சிக்கு வர வேண்டும். மதிமுக வேட்பாளர் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவார்’’ என பேசினார். இதில் மேற்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு, மதிமுக மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், சிபிஐ மாவட்ட செயலாளர் லிங்கம், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் சதுரகிரி ஆகியோர் கலந்து கொண்டனர். மதிமுக நகர செயலாளர் கணேஷ்குமார் நன்றி தெரிவித்தார்.

Tags : Madhimuga ,Sathur Ramachandran ,
× RELATED விருதுநகர் மேல்நிலை பள்ளியில் ரூ.2.14...