மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

கம்பம் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், வேதா வெங்கடேஷ் போட்டியிடுகிறார். இவர், நேற்று காலை உத்தமபாளையம் தேரடி திடலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மெயின்பஜார், கிராமச்சாவடி, பைபாஸ் வழியாக வந்து தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி சக்திவேலிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இதில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

கம்பம் தொகுதியில்

இதுவரை 20 பேர்:

கம்பம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் ராமகிருஷ்ணன், அதிமுக சார்பில் சையதுகான், நாம் தமிழர் சார்பில் அனீஸ் பாத்திமா, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சுரேஷ், மக்கள் நீதி மையம் சார்பில் வேதா.வெங்கடேஸ் மற்றும்  சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட 20 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். நேற்று மட்டும் 15 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Related Stories:

>