×

அமெரிக்கன் கல்லூரியில் மாநில அளவிலான ஹாக்கி போட்டி

மதுரை, மார்ச் 19: மதுரை அமெரிக்கன் கல்லூரியில், `பிஷப் டாக்டர் ஏ.கிறிஸ்டோபர் ஆசிர் நினைவு’ நான்காவது மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டி நடந்தது. 16 அணிகள் பங்கேற்று, 3நாட்கள் நடந்த போட்டிகளில் சென்னை, கோவை, சிவகாசி, திருநெல்வேலி, ஈரோடு, ராமநாதபுரம், திண்டுக்கல் மற்றும் மதுரையின் பல்வேறு அணிகள் மோதின. முதலாவது அரை இறுதிப்போட்டியில் சென்னை நாசரேத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியும், இரண்டாவது அரை இறுதிப்போட்டியில் மதுரை அமெரிக்கன் கல்லூரி அணியும் வென்றன. 3வது இடத்தை பி.எஸ்.என். இன்ஜினியரிங் கல்லூரி அணி,  4வது இடத்தை மதுரை அருள் ஆனந்தர் கல்லூரி அணி தக்க வைத்தன.

மதுரை அமெரிக்கன் கல்லூரி அணியும் சென்னை நாசரேத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியும் மோதிய இறுதிப்போட்டியில் 3க்கு 0 என்ற கோல் அடிப்படையில் மதுரை அமெரிக்கன் கல்லூரி அணி கோப்பையைக் கைப்பற்றியது. பரிசளிப்பு நிகழ்ச்சியில் அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், ஹாங்காங் யுனைட்டெட் போர்ட் திட்ட ஆலோசகர் ஸ்பர்ஜன், உடற்கல்வி இயக்குநர் செஸ்டர் மனுவேல், உடற்கல்வி உதவி இயக்குநர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.

Tags : American College ,
× RELATED அமெரிக்கன் கல்லூரியில் 2 நாள் சர்வதேச மாநாடு