நத்தம் தொகுதியில் ஆண்டி அம்பலம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் தேர்தல் பொறுப்பாளர் ேபச்சு

கோபால்பட்டி, மார்ச் 19: சாணார்பட்டி ஒன்றியம், கோபால்பட்டியில் திமுக சார்பில் ஊழியர் கூட்டம் நடந்தது. மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயன் தலைமை வகித்தார். நத்தம் தொகுதி திமுக வேட்பாளர் ஆண்டிஅம்பலம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் நத்தம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் ஜெயக்குமார் பேசுகையில், ‘மீண்டும் உதயசூரியன் உதிக்க திமுக தொண்டர்கள் கடுமையாக உழைத்திட வேண்டும். திமுக வெற்றி பெற கூட்டணி கட்சியினரும் பாடுபட வேண்டும். நத்தம் தொகுதியில் ஆண்டிஅம்பலம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்’ என்றார். இதில் திமுக ஒன்றய செயலாளர் தர்மராஜ் மற்றும் கம்யூனிஸ்டு, மதிமுக, விசி உள்ளிட்ட தோழமை கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>