×

பாலசமுத்திரத்தில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் ஐ.பி.செந்தில்குமார் உறுதி

பழநி, மார்ச் 19: பழநி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ போட்டியிடுகிறார். தேர்தலுக்கு 15 நாட்களே உள்ள நிலையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதன்படி நேற்று ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ பாலாறு அணை, பாலசமுத்திரம் மாட்டு மந்தை, குறும்பபட்டி, கடைவீதி, பள்ளிவாசல், சண்முகவேல் மூலை, பார்க் மைதானம், ஆலமரத்துக்களம், அண்ணா நகர், தேக்கந்தோட்டம், நெய்க்காரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ பேசியதாவது, 10 ஆண்டுகால இருண்ட ஆட்சி விலக மக்கள் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும். மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே திமுக ஆட்சியின் முதல் கொள்கை. விலைவாசி குறைப்பு, வரி குறைப்பு போன்ற நடவடிக்கைகள் ஆட்சி வந்தவுடனேயே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் செயல்படுத்தப்படும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பாலசமுத்திரத்தில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும். நூலகத்திற்கு நல்ல கட்டிடம் அமைத்து தரப்படும். ஆமை வேகத்தில் நடந்து வரும் பாலசமுத்திரம் பேரூராட்சிக்கான குடிநீர் திட்டப்பணிகள் விரைவுபடுத்தப்படும்.
பாலசமுத்திரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தின் தரம் உயர்த்தப்படும். தனி காவல் நிலையம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இளைஞர்களுக்கான உடற்பயிற்சி மையங்கள், விளையாட்டு திடல்கள் ஏற்படுத்தி தரப்படும். பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதிய ஆசிரியர்கள் நியமிக்க உரிய நடிவடிக்கை எடுக்கப்படும். வீடில்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கான அரசு மானியங்கள், சலுகைகள் எளிதில் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Tags : IP ,Senthilkumar ,Balasamudram ,
× RELATED முதலியார்பேட்டையில் குழு லோன் வாங்கி தருவதாக மோசடி செய்த பெண் கைது