நுகர்வோர் உரிமை தின விழா

ஒட்டன்சத்திரம், மார்ச் 19: திண்டுக்கல் தனியார் மகளிர் கல்லூரியில் நுகர்வோர் உரிமை தின விழா நடந்தது. மாவட்ட செயலாளர் நாகராஜன் தலைமை வகிக்க, கல்லூரி நிர்வாகி பாத்லேமியோ முன்னிலை வகித்தார். முதல்வர் காயத்ரி வரவேற்றார். மாவட்ட தலைவர் சுப்பிரமணியம், பொருளாளர் ராஜேஷ் கண்ணன், வணிகவியல் துறை தலைவர் ரஷிதா பேகம் சிறப்புரையாற்றினர். விழாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், உணவுப்பொருள் கலப்படம், ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் குறித்தும், நுகர்வோருக்கான சட்ட விதிமுறைகள் குறித்தும் மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>