×

கொல்லிமலை அடிவாரம் செக்போஸ்டில் சுற்றுலா பயணிகளுக்கு நோட்டீஸ் வினியோகம்

சேந்தமங்கலம், மார்ச் 18: கொல்லிமலை அடிவாரம் காரவள்ளி சோதனை சாவடியில் பயணிகளுக்கு தீ எச்சரிக்கை நோட்டீசை வனத்துறையினர் விநியோகித்தனர். நாமக்கல் மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, தினமும் ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர். கோடைகாலம் தொடங்கியுள்ளதால் மலைப்பகுதியில் ஆங்காங்கே வறட்சி நிலவுகிறது. மாவட்ட வனத்துறையின் சார்பில், வனங்களை பாதுகாக்கும் விதமாக பொதுமக்கள், சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கொல்லிமலை அடிவாரம் காரவள்ளி சோதனை சாவடியில், நாமக்கல் வனசரகர் பெருமாள் தலைமையில் வனவர் ஆனந்தன், நடுகோம்பை வனக்காப்பாளர் மாதேஸ்வரன், சோதனை சாவடி வனக்காப்பாளர் காசிமணி ஆகியோர் கொண்ட குழுவினர், கொல்லிமலைக்கு சுற்றுலா வரும் பயணிகளிடம் தீ எச்சரிக்கை விழிப்புணர்வு நோட்டீசை வழங்கி வருகின்றனர். அதில் வனத்தில் வறட்சி நிலவுவதால், மரங்களில் இருந்து இலைகள் காய்ந்து உதிர்ந்துள்ளது. எனவே வனத்தில் மது அருந்தக்கூடாது, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை கொண்டு செல்லக்கூடாது, பீடி, சிகரெட் புகைத்தல் கூடாது. மீறி இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Killimayan ,
× RELATED கொல்லிமலை அடிவாரப் பகுதியில்...