ஓட்டப்பிடாரம் தொகுதியில் அனைத்து கிராமங்களுக்கும் கூட்டுக்குடிநீர்

ஓட்டப்பிடாரம், மார்ச் 19:   ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடும்  திமுக வேட்பாளர் சண்முகையா செக்காரக்குடி பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் புதியம்புத்தூரில் வீடு வீடாகச் சென்று பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். செக்காரக்குடி,  கட்டாலங்குளம், முடிவைத்தானேந்தல், வர்த்தக ரெட்டிபட்டி, திம்மராஜபுரம், தளவாய்புரம் வாக்கு சேகரித்த அவர் அங்குள்ள திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், முக்கியப் பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். பிரசாரத்தில் அவர் பேசுகையில், ‘‘தொகுதியில் உள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் கூட்டுக்குடிநீர் கொண்டுவருவேன். சாலை வசதிகளை விரிவுபடுத்துவதோடு அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தருவேன்’’ எந உறுதியளித்தார்.

  பின்னர் புதியம்புத்தூர் பகுதியில் திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினருடன் வீடுவீடாகச் சென்று ஆதரவு திரட்டினார். இதில் ஒன்றியச் செயலாளர் புதூர் சுப்பிரமணியன், தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆறுமுகம், ஒன்றிய துணைச்செயலாளர் வக்கீல் நாராயணன், மாவட்டப் பிரதிநிதி கணேசன், பேரூரணி ஜெயராஜ், ஒன்றியச் செயலாளர்கள் இந்திய கம்யூனிஸ்ட் அழகு, விசிக பாஸ்கர், மதிமுக வீரபாண்டி சரவணன், தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளர் மாடசாமி, மாவட்டப் பிரதிநிதி ஜோசப் மோகன், கொடியங்குளம் பஞ்சாயத்து தலைவர் அருண்குமார், கிளைச் செயலாளர்கள் மொட்டை சாமி, பூவலிங்கம், சுதாகர், கனகராஜ், ஜெகன், மகளிர் அணி ஜெயா  உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories:

>