×

நாசரேத் புனித லூக்கா மருத்துவமனையில் ரத்த சுத்திகரிப்பு பிரிவு

நாசரேத், மார்ச் 19:  நாசரேத் புனித லூக்கா மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்ட ரத்த சுத்திகரிப்பு பிரிவு திறப்பு விழா நடந்தது. தலைமை வகித்த தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம் திறந்துவைத்துப் பார்வையிட்டார். திருமண்டல ‘லே’ செயலாளர் எஸ்.டி.கே. ராஜன், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஹேபஸ் வேதபோதகம் முன்னிலை வகித்தனர். தூய யோவான் பேராலய தலைமை குருaவானவரும், மருத்துவமனை மேலாளருமான ஆன்ட்ரூ விக்டர் ஞானஒளி ஆரம்ப ஜெபம் செய்தார். மருத்துவமனை நிர்வாக அலுவலர் ரத்தினகுமார் வரவேற்றார்.  முன்னாள் எம்.பி. ஏ.டி.கே. ஜெயசீலன் வாழ்த்திப் பேசினார். இதில் திருமண்டல முன்னாள் உப தலைவர் தேவராஜ்ஞானசிங், குருமார்கள் ஜெபவீரன், இஸ்ரவேல் ஞானராஜ், செல்வராஜ், புனித லூக்கா சமுதாயகல்லூரி இயக்குநர் பேராசிரியர் ஜெயச்சந்திரன், புனித லூக்கா செவிலியர் கல்லூரித் தாளாளர் டாக்டர் கமலி ஜெயசீலன், ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கோயில்ராஜ், நாசரேத் ஆர்ட் தொழிற்பள்ளி தாளாளர் பைசோன், முதல்வர் ஸ்டீபன், முன்னிலைப்பயிற்சி மையதாளாளர் ஜாண்சன், திருமண்டல நிர்வாகக் குழு உறுப்பினர் தினேஷ், மாமல்லன், திருமண்டல பெருமன்ற உறுப்பினர் ஆண்ட்ரூஸ், தூய யோவான் ஆசிரியர் பயிற்சிநிறுவனமுதல்வர் லிதியாள் கிரேஸ்மணி, மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளித் தாளாளர் சந்திரன், மர்காஷிஸ்  மெட்ரிக் பள்ளித் தாளாளர் லயன்புஷ்பராஜ், தூய யோவான் பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தாளாளர் சாந்தகுமாரி, தலைமை ஆசிரியை மாசில்லா, மெர்க்கன்டைல் வங்கி மேலாளர் ஜாண், முன்னாள் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரித் தாளாளர்  லேவிஅசோக்சுந்தர்ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.


Tags : Blood Purification Unit ,St. Luke's Hospital ,Nazareth ,
× RELATED தமிழகத்தை வஞ்சித்த பாஜவை வீட்டுக்கு அனுப்புவோம்