×

சாமிதோப்பு பாலபிரஜாபதியிடம் ராதாபுரம் திமுக வேட்பாளர் அப்பாவு ஆசி

ராதாபுரம், மார்ச் 19: ராதாபுரம் தொகுதி திமுக வேட்பாளர் அப்பாவு, சாமிதோப்பு அன்புவனம் பூஜிதகுரு பாலபிரஜாபதி அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றார்.ராதாபுரம் தொகுதியில் அப்பாவு ஏற்கனவே 3 முறை எம்எல்ஏவாக இருந்து தொகுதி மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொண்டுள்ளார். தற்போது மீண்டும் ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். இதையொட்டி அப்பாவு, ஆன்மீகம் சம்பந்தப்பட்ட பெரியோர்களையும் முக்கிய கூட்டணி கட்சி
 நிர்வாகிகளையும் பொதுமக்களையும் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் குமரி மாவட்டம் சாமிதோப்பு பூஜிதகுரு பாலபிரஜாபதி அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றார். அவருடன் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளரும், அம்பை திமுக வேட்பாளருமான ஆவுடையப்பன், நெல்லை எம்.பி. ஞானதிரவியம், மாநில திமுக வர்த்தக அணி துணை செயலாளர் கிரஹாம்பெல் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : Radhapuram ,DMK ,Appavu Asi ,Samithoppu Balaprajapati ,
× RELATED தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர்...