×

தென்காசியில் காங்கிரஸ் வேட்பாளர் அறிமுக கூட்டம்

தென்காசி, மார்ச் 19: தென்காசி தொகுதி திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் காங்கிரஸ்  வேட்பாளர் பழனிநாடார்  அறிமுக கூட்டம் நடந்தது.  திமுக தெற்கு மாவட்ட  செயலாளர் சிவபத்மநாதன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் தென்காசி வடக்கு செல்லத்துரை, மதிமுக ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முத்துப்பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் இசக்கித்துரை, முஸ்லிம்லீக் செய்யது சுலைமான், மமக முகம்மது யாக்கூப், விசிக டேனி அருள்சிங், ஆதி தமிழர் பேரவை கலிவருணன், பார்வர்டு பிளாக் தங்கப்பாண்டியன், தவாக கணேசன், சமக லூர்துநாடார், தமிழ்புலிகள் குற்றாலம்குமார், எம்ஜிஆர் மக்கள் கழகம் தலைவர் மேஜர் ரவிகுமார் முன்னிலை வகித்தனர். நகர காங்கிரஸ் தலைவர் காதர்மைதீன் வரவேற்றார்.

 திமுக மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஆயான்நடராஜன், ஜெயக்குமார், நகர செயலாளர் சாதிர், ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம், பேரூர் செயலாளர்கள் சுடலை, மந்திரம், முத்தையா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் சுப்பையா, கோமதிநாயகம், வக்கீல் வேலுச்சாமி, டாக்டர் மாரிமுத்து, குற்றாலம் குட்டி, சேக் முகம்மது,  அணி துணை அமைப்பாளர்கள்  சாமித்துரை, ஜீவானந்தம், பாலாமணி, சங்கரன்வாத்தியார், ராஜேந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி  அமைப்பாளர் நாகராஜ் சரவணார், மாவட்ட பிரதிநிதி பாலசுப்பிரமணியன், நகர நிர்வாகிகள் சொக்கலிங்கம், ஷேக்பரீத், நடராஜன், பால்ராஜ், கலை பால்துரை,  முன்னாள் அறங்காவலர் வீரபாண்டியன், சாகுல்ஹமீது, மோகன்ராஜ், செங்கோட்டை முன்னாள் யூனியன் சேர்மன் சட்டநாதன், அந்தோனி வியாகப்பன், கார்வின். பால்துரை, மாநில பொதுக்குழு உறுப்பினர் மாடசாமி ஜோதிடர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Congress ,Tenkasi ,
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...