×

ராதாபுரம் அதிமுக வேட்பாளர் இன்பதுரை கூத்தங்குழி கத்தோலிக்க பங்கு தந்தையிடம் ஆசி

ராதாபுரம், மார்ச் 19: ராதாபுரம் அதிமுக வேட்பாளர் இன்பதுரை, கூத்தங்குழி கத்தோலிக்க திருச்சபை பங்கு தந்தையிடம் ஆசி பெற்றார். ராதாபுரம் தொகுதி எம்எல்ஏ இன்பதுரை மீண்டும் அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த அவர் தொடர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணியை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.நேற்று கூத்தங்குழி கிராமத்திற்கு சென்று கத்தோலிக்க திருச்சபை பங்குத்தந்தை ராஜனை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் கிராமத்திலுள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் மீனவர்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கடந்த 5 ஆண்டுகளில் செய்த முக்கிய சாலைகள் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்த தனக்கு வாக்களிக்க வேண்டும் என்றார். பின்னர் செட்டிகுளம் பகுதிக்கு சென்ற அவர், அங்குள்ள முக்கிய பிரமுகர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், சமுதாய பெரியவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.அவருடன் ஒன்றிய செயலாளர்கள் ராதாபுரம் மேற்கு அந்தோணி அமலராஜா, வள்ளியூர் தெற்கு அழகானந்தம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் செல்வகுமார், நிர்வாகிகள் சூசை வியாகுலம், வினிஸ்டர், லாசர், அந்தோனி, கித்தேரியான், சேசு ராயப்பன், சூசை, சந்தியாகு மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags : Radhapuram ,AIADMK ,Inbathurai Koothankuzhi ,Catholic ,
× RELATED பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி...