×

கல்லிடைக்குறிச்சியில் திமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் ஆவுடையப்பன் பங்கேற்பு

அம்பை, மார்ச் 19: அம்பை தொகுதி திமுக சார்பில் மதசார்பற்ற கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் கல்லிடைக்குறிச்சியில் நடந்தது. காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் முன்னாள் எம்எல்ஏ வேல்துரை தலைமை வகித்தார்.
நெல்லை எம்பி ஞானதிரவியம், முன்னாள் எம்பி ராமசுப்பு, காங்கிரஸ் மாநில துணைப் பொதுசெயலாளர் வானுவாமலை, மாவட்ட செயலாளர்கள் மதிமுக  ரைமண்ட், இந்திய கம்யூனிஸ்ட் காசிவிசுவநாதன், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் பாஸ்கரன், விசிக மாவட்ட தலைவர் சுந்தரம், இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பேரவை மாநில துணை பொதுச்செயலாளர் கார்த்திக், முஸ்லிம்லீக் மீரான் இலியாஸ், மமக ரசூல்மைதீன், மஜக நிஜாம், தேவர் மக்கள் இயக்கம் சங்கிலிபாண்டியன், ஆதித்தமிழர் பேரவை ராமமூர்த்தி, திராவிடர் இயக்க கதிர்வேல் ஆகியோர் பேசினர். முன்னாள் சட்டப்பேரவை தலைவரும் வேட்பாளருமான ஆவுடையப்பன் பேசும்போது, கடந்த திமுக ஆட்சியில் எம்எல்ஏவாக இருந்தபோது அம்பை தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு தொண்டர்களிடம் ஆதரவு திரட்டினார்.தான் வெற்றி பெற்றால் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார்.

முன்னதாக செயல்வீரர்கள் கூட்டத்திற்கு அம்பையிலிருந்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தொண்டர்கள் இருசக்கர வாகனத்தில் புடைசூழ திறந்த வேனில் வாக்கு கேட்டு கல்லிடைக்குறிச்சி வந்தார்.கூட்டத்தில் திமுக மாநில தொண்டர் படை துணை செயலாளர் ஆவின் ஆறுமுகம், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், மகளிரணி துணை அமைப்பாளர் ராஜம்ஜான், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பண்ணை முருகன், தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் கணேஷ்குமார் ஆதித்தன், கண்ணன், மாவட்ட துணைச்செயலாளர் சித்திக், மாணவரணி மாவட்ட அமைப்பாளர் ராமச்சந்திரன், விவசாயஅணி முத்துப்பாண்டியன், விவசாய தொழிலாளரணி மாஞ்சோலை மைக்கேல், வக்கீல்கள் காந்திமதிநாதன், ஜோயல்ஹென்றி, ராஜேந்திரன், திருமலைக்குமார், மீனாட்சிநாதன், சாகுல்ஹமீது, காஜா, சண்முகசுந்தரம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் வேல்முருகன், ஜின்னா, வைகுண்டம், ஜான் ரவீந்தர், விவசாய அணி ஆறுமுகம், கிட்டு, உரக்கடை கண்ணன், தகவல் தொழில்நுட்ப அணி அண்ணாதுரை, காங்கிரஸ் இளைஞர் பேரவை துரை, ஒன்றிய தொண்டரணி பூதத்தான், ஒன்றிய திமுக பழனி, அன்வர், மதிமுக ஒன்றிய செயலாளர் வெள்ளப்பாண்டி, வக்கீல் அமல்ராஜ் பங்கேற்றனர்.


Tags : DMK ,Kallidaikurichi ,Autayappan ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...