×

ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் வளர்ச்சி பணிகளை தொடருவேன்: தா.மோ.அன்பரசன் வாக்குறுதி

ஆலந்தூர்: ஆலந்தூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசன் ஆதம்பாக்கம், நங்கநல்லூர், பழவந்தாங்கல், மூவரசன்பட்டு போன்ற பகுதியில் உள்ள நலச்சங்க நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அப்போது அவர் பேசுகையில், ‘‘நான் கடந்த கடந்த 5 ஆண்டுகளாக உங்களில் ஒருவனாக இருந்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளேன். பழவந்தாங்கலில் ₹80 லட்சத்தில் நூலக கட்டிடம், தில்லைகங்கா நகரில் ₹48 லட்சத்தில் உள்வட்ட சாலையில் கல்வெட்டு, ஆலந்தூர் முழுதும் 4000 புதிய எல்இடி விளக்குகள், இரண்டாம் கட்டளை இருளர் காலனியில் பழுதடைந்த 14 வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டி கொடுத்துள்ளேன். நந்தம்பாக்கம் ஜடிபிஎல் காலனியில் சாலை, பரங்கிமலை சுரங்கப்பாதை அருகில் உள்ள சாலையை மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் கைப்பற்றயபோது அந்த  றுவனத்திடமிருந்து போராடி மீட்டு தந்தேன், பத்திரப்பதிவு அலுவலத்தை கிண்டிக்கு மாற்றும் திட்டத்தை தடுத்து நிறுத்தியது, வட்டாட்சியர் அலுவலகம் அருகிலேயே பத்திர பதிவு அலுவலகம் அமைக்க 10 சென்ட் நிலம் பெற்றுத்தந்தது.

அந்த கட்டிடம் எழுப்ப ₹90 லட்சம் நிதி உதவி பெற்று தந்தது, ஆலந்தூர் பகுதியில் விடுபட்ட 82  தெருக்களுக்கு ₹11.62 கோடியில் குடிநீர் திட்டம், மணப்பாக்கத்தில் ₹57 கோடியில் பாதாள சாக்கடை திட்டம், நந்தம்பாக்கம் 158 வட்டத்தில் ₹50 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் போன்ற பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. வளர்ச்சி திட்ட பணிகள் தொடர எனக்கு வாக்களியுங்கள், என்றார். தொடர்ந்து, ஆலந்தூர் 162வது வட்ட தேமுதிக செயலாளர் வினோத் குமாருடன் 50க்கும் மேற்பட்டோர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். ஆலந்தூர் தெற்கு பகுதி திமுக செயலாளர் என்.சந்திரன், வட்ட செயலாளர்கள் சாலமன் ஜெகதீஸ்வரன் நடராஜன் உடனிருந்தனர்.

Tags : Alandur Assembly ,Thamo Anparasan ,
× RELATED நங்கநல்லூர் வாக்குச்சாவடியில் தேர்தல் அதிகாரி ஆய்வு