தேர்தல் பணிகளில் குறைபாடு பட்டதாரி ஆசிரியர் சங்கம் புகார்

திருப்பூர், மார்ச் 19: தேர்தல் பணிகளை முறையாக வகைப்படுத்தவில்லை என பட்டதாரி ஆசிரியர் சங்கம் புகார் தெரிவித்து, தலைமை தேர்தல் ஆணையருக்கு மனு அனுப்பி உள்ளது. இதுகுறித்து, பட்டதாரி இளநிலை ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் முத்து கூறியதாவது: வழக்கமாக ஆசிரியர்களின் ஊதியம், அனுபவங்களை அடிப்படையாக கொண்டே தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யப்படும். தேர்தல் பணி விண்ணப்பங்களிலும் இதற்கான விபரங்கள் கேட்கப்படுகின்றன.  அதிக ஊதியம் பெறுவோருக்கு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் பணியும், அதற்கு கீழ் உள்ளவர்களுக்கு பி2, பி3, பி4 அலுவலர்கள் பணியும் வழங்கப்படும். தற்போது அதற்கு நேர்மாறாக பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிக ஊதியம் பெறும் தலைமையாசிரியர்களுக்கு வாக்காளர்களுக்கு விரலில் மை வைக்கும் பணியும், குறைவாக ஊதியம் பெறுபவர்களுக்கு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் பணியும் கொடுக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு இதே பாணியில் பணியாணை வழங்கப்பட்டுள்ளது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஊதியம் அடிப்படையில் தேர்தல் பணி ஒதுக்கப்பட வேண்டுமென சென்னை தலைமை தேர்தல் அலுவலருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Related Stories:

>