வீரணம்பாளையம் ஊராட்சி பகுதியில் மு.பெ. சாமிநாதன் தீவிர வாக்கு சேகரிப்பு

காங்கயம், மார்ச் 19: காங்கயம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அமைச்சரும், திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான மு.பெ.சாமிநாதன் நேற்று காங்கயம் தொகுதிக்குட்பட்ட வீரணம்பாளையம் ஊராட்சி பகுதியில் உள்ள போக்குவரத்து நகர், முல்லை நகர், படியாண்டிபாளையம், பகவதிபாளையம், பட்டகாரர் புதூர், மோளபாளையம், பூவாநல்லூர், அர்த்தநாரிபாளையம், வீரணம்பாளையம், சம்பவலசு, சேமலைவலசு, காட்டுநாயக்கன்பாளையம், ராம்நகர் உள்ளபட 24 கிராமப்பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அவருக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

மேலும் அப்பகுதியில் அடிப்படை வசதிகள் சரியில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். அவர்களிடம் திமுக ஆட்சி அமைந்தவுடன் அனைத்து அடிப்படை பிரச்னைகளும் தீர்க்கப்படும் என மு.பெ. சாமிநாதன் தெரிவித்தார். ‘‘திமுக தேர்தல் அறிக்கை மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வெற்று விளம்பரங்களுக்காக இல்லாமல் தமிழகத்தை உலகத்தின் முன் மாதிரி மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற சமூக பொருளியல் பார்வையின் அடிப்படையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியை அகற்றவேண்டும் இதற்கு மக்கள், திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்’’ என கேட்டுக்கொண்டார். பிரசாத்தின்போது ஒன்றிய நகர, வார்டு பிரதநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>